விவேகம் படத்தின் மொத்த பாடல்களும் வெளிவந்தது- இதோ விமர்சனத்துடன்
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தின் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விவேகம். இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் அதில் 3 சிங்கிள் ட்ராக்காக ஒவ்வொன்றாக ரிலிஸாகிவிட்டது. தற்போது மற்ற 4 பாடல்களும் ரிலிஸாகியுள்ளது...இதோ...
ஏகே தீம் மியூஸிக்
அஜித் படங்கள் என்றாலே எப்போதும் தீம் மியூஸில் செம்ம ஸ்பெஷல், இதில் அஜித்திற்கு எப்போதுமே செம்ம தீம் மியூஸிக் கொடுப்பது யுவன் தான், இன்றைய ட்ரெண்ட் அனிருத் வேதாளத்தில் ஆலுமா டோலுமா ஹிட் கொடுத்தாலும், தீம் மியூஸிக் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, ஆனால், விவேகத்தில் விட்ட இடத்தை பிடித்துவிட்டார், பலரின் ரிங்டோனாக இருக்கும், என்ன எங்கோ கேட்ட ஹாலிவுட் தீம் மியூஸிக் போலே உள்ளது.
Never Give Up
ஹாலிவுட் படங்களை போல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பாடலை முழுவதுமே ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டார் அனிருத், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் டைட்டில் ட்ராக் போல் உள்ளது, சர்வைவா பாடலின் வரிகளை முழுவதும் ஆங்கிலத்தில் கேட்ட அனுபவம்
வெறியேற
எப்போதும் இதுபோல் ஒரு போர்ஸான பாடலை ஆண்குரல் தான் வரும், ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக பெண் குரலில் ஆரம்பிக்கின்றது இந்த வெறியேற, அஜித் மீண்டும் எழுந்து திருப்பி வந்து அடிக்கும் போது மாண்டேஜ் பாடலாக வருவது போல் தெரிகின்றது. கொஞ்சம் இடையில் பைரட்ஸ் ஆப் கரீபியன் தீம் மியூஸிக் எல்லாம் வந்து செல்கின்றது.
காதலாடா
ஏறகனவே காதாலாட பாடலை கேட்டு இருப்போம், அதை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து கொடுத்துள்ளார், இந்த வருடத்தில் சிறந்த மெலடி ஹிட்.
விவேகம் படத்தின் மொத்த பாடல்களும் வெளிவந்தது- இதோ விமர்சனத்துடன்
Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment