100 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் மேற்கு வங்கத்தில் பறிமுதல் - 3 பேர் கைது
மேற்கு வங்க மாநிலத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பாராசாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 3 நபர்கள் பாம்பு விஷத்தை சட்டவிரோதமாக கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 ஜாடிகளில் இருந்த பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த பாம்பு விஷத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மருந்துகள் தயாரிக்கவும், பாலியல் சக்தியை அதிகரிக்கவும் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த விஷத்திற்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷம் நாகப்பாம்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள், நேபாளம், பூட்டான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பாம்பு விஷத்தை கடத்தி விற்பனை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் மேற்கு வங்கத்தில் பறிமுதல் - 3 பேர் கைது
Reviewed by Author
on
September 12, 2017
Rating:

No comments:
Post a Comment