இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் சிறையில் அடைப்பு.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் 26-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் தாக்கினார்கள். படகுகளையும் சிறைபிடித்தனர்.
பின்பு மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரித்து விட்டு நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மீனவர்கள் அனைவரையும் 26-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 12 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக எல்லை தாண்டி வந்ததாகவும், அப்போது இலங்கை கடற்படையினர் பிடித்து விட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் சிறையில் அடைப்பு.
Reviewed by Author
on
September 13, 2017
Rating:

No comments:
Post a Comment