கர்ப்பிணிகள் மருத்துவமனை வருவதற்கு 1,000 ரூபாய்: இந்தியா ஒடிசா அரசு அறிமுகம்
ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனை வந்து சேர்வதற்காக 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பிரசவத்தின் போது குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அவற்றை குறைக்கும் வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் அவரகளது உறவினர்களால் தோளில் சுமந்த படியும், கட்டை வண்டியில் வைத்து தள்ளிய படியும், நடந்தும் மருத்துவமனைக்கு வந்து சேரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டே கர்ப்பிணிகள் மருத்துவமனை வந்து சேர்வதற்காக 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த திட்டத்தை முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத பல்வேறு கிராமங்களில் இருக்கும் கர்ப்பிணிகள் மருத்துவமனை வந்து சேர்வதற்கு தேவைப்படும் நிதியை அரசு வழங்குகிறது.
மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 30 கிராமங்களில் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும். இதனால் 60,000 கர்ப்பிணிகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்துக்காக ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகள் மருத்துவமனை வருவதற்கு 1,000 ரூபாய்: இந்தியா ஒடிசா அரசு அறிமுகம்
Reviewed by Author
on
September 24, 2017
Rating:

No comments:
Post a Comment