சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது அரைசதம் அடித்தார் டோனி....
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அரைசதம் விளாசியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 100வது சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். சிறப்பாக விளையாடிய டோனி அரைசதம் அடித்தார். அவர் 88 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் குவித்தது.
இப்போட்டியில், டோனி தனது 66வது ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடிக்கும் 100வது அரைசதமாகும். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (164), ராகுல் டிராவிட் (146) மற்றும் சவுரவ் கங்குலி (107) ஆகியோர் சர்வதேச போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது அரைசதம் அடித்தார் டோனி....
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment