கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு 14000 வீடுகள் உடனடித் தேவை....
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு சுமார் 14 ஆயிரத்து 600ற்கும் மேற்பட்ட வீடுகள் தேவையாகவுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வை அடுத்து மீள்குடியேறிய மக்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வீட்டுத்திட்டம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,
வீடமைப்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் இந்த மாவட்டத்தில் வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட இன்னமும் 14 ஆயிரத்து 600 வரையான வீடுகள் தேவையாகவுள்ளன.
எமது தேவைகள் என்பது அதிகமாக இருக்கின்ற நிலையில் அதனை நிறைவேற்றுகின்ற விகிதாசாரம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது.
இதனை துரிதப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது, அத்தோடு குறித்த 14 ஆயிரத்து 600 வீடுகளும் உடனடித் தேவையாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு 14000 வீடுகள் உடனடித் தேவை....
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment