வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டடங்களை ஒரே நாளில் திறக்க முடிவு
வடக்கு மாகாணத்தில் 1640 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டடங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளன. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக விடுதி என்பனவே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளன.
தெற்கு கிழக்கு ஆசிய நாட்டிற்கான GFATM நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்க மற்றும் GFATM நிறுவனத்தின் கிழக்கு தெற்கு ஆசியாவிற்கான பிரதான முகாமையாளர் MS. BALANCA GIL ANTUNANO VIZCAINO ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் குறித்த கட்டடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டடங்களை ஒரே நாளில் திறக்க முடிவு
Reviewed by Author
on
September 22, 2017
Rating:

No comments:
Post a Comment