கிளிநொச்சியில் 389 மீனவர்கள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்!
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் மூவாயிரத்து 389 மீனவர்கள் தமது தொழிசார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எழுபது வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றபோதும், மொத்தமாகவுள்ள குடும்பங்களில் நான்காயிரத்து 205 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்இதில் தற்போது கரைச்சி, கண்டாவளை, பச்சலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் மூவாயிரத்து 389 பேர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைள் உள்ளிட்ட தொழில்களால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கூடுதலான கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, உரிய தொழில் உபகரணங்கள் இன்மை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள நன்னீர் குளங்களின் கீழ் நன்னீர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வரும் 750 வரையான குடும்பங்க்களும் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 389 மீனவர்கள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்!
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment