அண்மைய செய்திகள்

recent
-

50 பேர் கொண்ட தமிழக குழு......படகுகளை மீட்க இலங்கை வருகிறது


இலங்கை விடுவித்துள்ள 42 படகுகளையும் கொண்டுசெல்வதற்காக 50 பேர் கொண்ட மீனவர்கள் குழு தமிழகத்திலிருந்து இலங்கை வரவுள்ளனர்.அவர்கள் இன்று காலை மண்டபம் பகுதியிலிருந்து புறப்பட்டதாகவும், மாலை அளவில் காரைநகரை அடைந்திருப்பர் என்றும் இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 42 படகுகள் கடந்த ஓகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டன.இதனை கடந்த மாதம் இலங்கை வந்த இந்திய கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று ஆய்வு செய்ததில், 36 படகுகள் மாத்திரமே பயன்படுத்தக்கூடிய தரத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த படகுகளை மீட்பதற்காக 50 பேர் கொண்ட மீனவர்கள் குழு தமிழகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

50 பேர் கொண்ட தமிழக குழு......படகுகளை மீட்க இலங்கை வருகிறது Reviewed by Author on September 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.