வித்தியாவுக்கு நீதி கிடைத்து விட்டது! கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் ஏழு பேருக்கு இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு எனது மகளுக்கு கிடைத்த நீதி, எமது நண்பிக்கு கிடைத்த தீர்ப்பு, ஒட்டுமொத்த பெண்களுக்கும் கிடைத்த நீதி என பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் வித்தியாவின் உறவுகள் முதல், முகம் தெரியாதவர்கள் வரை வித்தியாவுக்கு கிடைத்தது நல்ல தீர்ப்பு என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார். இதை இந்த இடத்தில் குறிப்பிட்டாகவே வேண்டும். 2015ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வித்தியாவின் தாயாரை சந்தித்திருந்தார். இதன்போது, “புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
தொடங்கியது. இதில் கைதானவர்கள் 12 பேர். இவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியிருந்தார். மிகுதியாக இருந்த 9 பேரில் இருவருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அதனடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த ஏழு பேருக்கும் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 30,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவி வித்தியாவின் குடும்பத்தாருக்கு ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வித்தியாவுக்கு கிடைத்த நீதியாகவே பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் வித்தியாவுக்காக பாடுபட்ட அனைவருக்கும் அனைத்து தரப்பிலிருந்தும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் “வித்தியாவுக்கு நீதி கிடைக்கும்” என்று அன்று ஜனாதிபதி கூறிய உறுதிமொழியை நினைவுபடுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.
வித்தியாவுக்கு நீதி கிடைத்து விட்டது! கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி...
Reviewed by Author
on
September 28, 2017
Rating:
Reviewed by Author
on
September 28, 2017
Rating:


No comments:
Post a Comment