அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவால் 7000 இந்தியர்கள் பாதிப்பு....
அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக ஒபாமா கொண்டுவந்த சலுகைகளை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவால் 7000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக ஒபாமா கொண்டுவந்த சலுகைகளை ரத்து செய்ய தற்போதைய அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவால் 7000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
"குழந்தை குடியேற்றவாசிகளுக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நடவடிக்கை' (டிஏசிஏ) என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதனை டிரம்ப் பரிசீலிக்க இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகையின் முன்னர் குவிந்து டிரம்புக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.
இந்த சட்டத்தை டிரம்ப் ரத்து செய்யப்படும் பட்சத்தில் சுமார் 7000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், டிரம்ப்பின் இந்த முடிவுக்கு அவரது சொந்த கட்சியான குடியரசுக்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்த சட்டம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவால் 7000 இந்தியர்கள் பாதிப்பு....
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment