மன்னார் பொதுவைத்தியசாலை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்....நோயாளர்கள் பாதிப்பு
மன்னார் பொதுவத்தியசாலை மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள் சைற்றம் மருத்துவக்கல்லூரிக்கு எதிராகவே இந்த கடமைப்புறக்கணிப்பு இடம்பெறுகின்றது இதைப்போலவே சில தடவைகள் வேலைநிறுத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.....
தகுதியில்லாத முறையில் பணம்செலுத்தி மருத்துவராகும் மருத்துவர்களுக்கு எதிரானது தான் என்றாலும் இங்கே அதிகமாக பாதிக்கப்படுவது என்னமோ...மக்களும் நோயாளிகளும் தான்.....
இன்று கிளினிக் நாள் அதிகாலையிலே வந்து குந்திக்கொண்டு இருக்கும் முதியவர்கள் இயலாதவர்கள் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருத்தங்கள் அவை சொல்லில் அடங்காது.
மன்னார் நகரப்பகுதியில் உள்ளவர்கள் ஓரளவு பரவாயில்லை ஏனைய கிராமங்களில் இருந்து வருகின்றவர்கள் நிலையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்......
- அதிகாலையிலே வருவர்களும் அடுத்தவர் வீட்டில் தங்கி நிற்பவர்களும் காலையில் அவர்களின் இயலாமையில் இருக்கும் போது தான் இந்த வேலைநிறுத்தங்கள் முன்கூட்டியே தகவல் வழங்காமல் செய்யப்படுவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் இவர்களின் நிலை எண்ணிப்பாருங்கள்......
- சிலர் வாங்கிளில் இருந்துகொண்டே தூங்கிக்கொண்டு இருப்பார்கள்.
- சிலர் மயக்கத்தில் இருப்பார்கள் விசாரித்தால் சுடுநீர் குடிக்காமல் வந்திற்றன் என்பார்கள்.
- சிலரால் அதிக நேரம் இருக்கவோ..... நிற்கவோ..... முடியாது
இன்றும் நீண்ட நேரக்காத்திருப்புக்கு பின் தான் சொல்லுகின்றார்கள் இன்று கிளினிக் இல்லை கொப்பிகளை தந்துவிட்டு போங்கள் அடுத்தமாதத்திற்கான திகதி போட்டு தருகின்றோம் என்று....
மருத்துவர்களிடம் அன்பான வேண்டுகோள்....என்னவென்றால்....
தாங்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானதும் உண்மையானதும் தான் இருந்தாலும் ஏனைய துறையினர் வேலைநிறுத்தம் செய்வது பெரிதான பாதிப்பினை ஏற்படுத்தாது ஆனால் மருத்துவர்களாகிய நீங்கள் கடமை புறக்கணிப்பு செய்யும் போது அது பலரின் உயிர் சம்மந்தப்பட்ட விடையம் அல்லாவா.....
- அறுவைசிகிச்சைகள்
- அவசர நோயாளர்கள் வருகை
- பிள்ளைப்பேறு தொடர்பான சிகிச்சைகள்
- இன்னும் பல சிகிச்சைகள்
சைற்றம் மற்றும் ஏனைய விடையங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தும் போது மக்களையும் நோயாளர்களையும் கருத்தில் கொண்டு அவர்களை பாதிக்காத வண்ணம் மாற்று வழியினை கையாள்வது யாவருக்கும் நலன் தரும்.
கடமையை உணருங்கள்....... கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.......
-மன்னார்விழி-

மன்னார் பொதுவைத்தியசாலை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்....நோயாளர்கள் பாதிப்பு
Reviewed by Author
on
September 12, 2017
Rating:

No comments:
Post a Comment