மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் சிறப்பாக இடம் பெற்ற கரையோர தூய்மையாக்கல் தின நிகழ்வு-(படம்)
சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களம் ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதான நிகழ்வு மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(18) காலை இடம் பெற்றது.
சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தினை முன்னிட்டு பள்ளிமுனை மீனவர்கள், பள்ளிமுனை மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உறுப்பினர்கள் என சுமார் நூற்றிற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.
தேசிய கடல் வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவம் நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெற்றது. அதன் ஓர் அங்கமாக மன்னார் பள்ளிமுனையில் குறித்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18) காலை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் சிறப்பாக இடம் பெற்ற கரையோர தூய்மையாக்கல் தின நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment