மன்னார் மாவட்த்தின் முதல் தடவையாக சிறப்பு திடல் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நிகழ்வு....
தௌகீத் ஜமாத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழுகைநிகழ்வு இன்று காலை 02-09-2017 மன்னார் பிரதான பாலத்தின் அருகில் உள்ள திடலில் மன்னார் நகரில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தொழுகையில் கலந்து சிறப்பித்தனர்.
இறைவனின் ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள், அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், இஸ்மாயில் (அலை) அவர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட தியாகத்தின் வரலாற்றை நினைவு கூறுகின்ற இன்றைய தியாத்திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளில் உலகவாழ் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் முஸ்லிம் நாடுகளின் அமைதி சமாதானம் சுபீட்சத்திற்காகவும் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
இத்திருநாளில் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் உறவுகளுக்கும் குறிப்பாக எமது மன்னார் மாவட்ட்டத்தினதும் எம்து இணையத்தினதும் வாசகர்களாகிய ஒவ்வொருவருக்கும் இனிய ஹஜ்ஜுப்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக...

மன்னார் மாவட்த்தின் முதல் தடவையாக சிறப்பு திடல் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நிகழ்வு....
Reviewed by Author
on
September 02, 2017
Rating:

No comments:
Post a Comment