சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்
இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலாம் இடத்தை பெற்றுள்ளாா்.
கடந்த யூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம் இலங்கரட்ணம் சஜித் என்ற இளைஞரே இந்தியா சிதம்பரத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளாா்.
22 தொடக்கம் 28 வயது பிரிவுப் போட்டியில் இந்தியா உட்பட பல நாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டே சஜித் முதலாம் இடத்தை பெற்றுள்ளாா்
சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment