மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் வடமாகாண சுகாதார அமைச்சர் வரவேற்பு நிகழ்வு
 வடமாகாணசபையின் அமைச்சர் வாரியத்தில் புதிதாக பதவி ஏற்ற  வடமாகாண சுகாதார சுதேச  மருத்துவ நன்னடத்தை  சிறுவர்பராமரிப்பு  சேவைகள் அமைச்சர்  கௌரவ வைத்திய கலாநிதி ஞாணசீலன் குணசீலன்  அவர்களின் வரவேற்பு நிகழ்வானது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி தலைமையில் 
இன்று காலை 10 மணிய்ளவில்  பாரம்ப்ரியமுறைப்படி வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு...... 
மன்னார் மாவட்டட்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் சுதேச மருத்துவர்கள் வைத்தியகலாநிதிகள்  சுகாதார இணைப்பாளர்கள் ஆணையாளர்கள் மருத்துவதாதிகள்  தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்நிகழ்வுகளாக........
- வரவேற்றலும்
- வரவேற்பு நடனம் செல்வி கிந்துயாவும்
- வாழ்த்துக்கவிகளும்
.நான் வடமாகாண சபை உறுப்பினராக கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருக்கின்றேன் அந்த நான்கு ஆண்டுகளில் எனது செயற்பாடு முழுமையாக இல்லை காரணம் பல இடைஞ்சல்கள் அதிகாராசிக்கல்கள் இருந்தது ஆனால் இப்போது எனக்கென தனியாசேவைகள் செய்வதற்கு முழுமையான அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனது சேவை மக்களின் தேவையினை பூர்த்திசெய்வதாக இருக்கும்,
இன்னொரு விடையம் என்னை இங்கு எல்லோருக்கும் நன்கு தெரியும் என்னுடன் படித்தவர்கள் என்னுடன் வேலைசெய்தவர்கள் எனக்கு படிப்பித்தவர்கள் எனது நண்பர்கள் இங்கு பல உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள் அவர்கள் என்னை பழக்கத்துக்கு ஏற்ற வகையில் அண்ணன் என்றோ தம்பி என்றோ மருத்துவர் என்றோ ஏன் குணசீலன் என்றோ அழைக்கலாம் கதைக்கலாம் ஆனால் கடமை சேவைகள் என வரும்போது தயவு செய்து சுகாதார அமைச்சர் என்ற வகையில் உங்களது தொடர்பாடல் இருப்பது சிறப்பானது அப்போதுதான் சிறப்பாக எல்லோரும் இணைந்து செயலாற்றமுடியும்.
-வை.கஜேந்திரன்-
மன்னார்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் வடமாகாண சுகாதார அமைச்சர் வரவேற்பு நிகழ்வு
 Reviewed by Author
        on 
        
September 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 07, 2017
 
        Rating: 
      




 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment