அண்மைய செய்திகள்

recent
-

ரோஹிங்கிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள்-உலக கனவான்கள் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது-


மியன்மார் தேசத்தின் இராணுவமும் பௌத்தமத குருமார்களும், இணைந்து அந்நாட்டில் வசித்து வரும் றோகிங்கிய சிறுபான்மை இஸ்லாமியர்களை மிக மோசமான முறையில் மனித குலத்திற்கு எதிராக இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்த நிலையில் குறித்த சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரியை ஆணையாளருக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக இன்று செவ்வாய்க்கிழமை(5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மியன்மார் தேசத்தின் இராணுவமும் பௌத்தமத குருமார்களும், இணைந்து அந்நாட்டில் வசித்துவரும் றோகிங்கிய சிறுபான்மை இஸ்லாமியர்களை மிக மோசமான முறையில் மனித குலத்திற்கு எதிராக இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை, என்பவற்றை சர்வதேச நியதிகளைக்கடந்து உலகின் மனச்சாட்சியை கேள்விக்குட்படுத்தும் வகையில் அநாகரிகமான அருவருக்கத்தக்கவகையில் காட்டுமிராண்டித்தனமாக, மிருகத்தனமாக, ஈனச்செயற்பாட்டில் மனிதகுலத்திற்கு எதிராக மனிதர்களே ஈடுபடுவது மிகுந்த வெட்கக்கேடான செயற்பாடாகும்.

ஆகவே இவ்வேளையில் உலக கனவான்கள் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் இலங்கையில் தமிழ் மக்களாகிய நாமும் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

அதனால் அந்தவலியும், வேதனையும் அனுபவரீதியாக புரிந்துகொண்டவர்கள் என்ற அடிப்படையில் இச் செயற்பாடு மிகுந்த வேதனையளிக்கின்றது.

அநாதைகளாய் அபலைகளாய் அலையும் அந்த இனக்குழுமத்திற்கு ஆதரவு வழங்குங்கள். அவர்களையும் இஸ்லாமியர்கள் என்றல்ல மனிதர்களாக மதியுங்கள்.

உலக நாகரீகம், தொழில்நுட்ப பெருவளர்ச்சியில் உயர்ந்துள்ளபோதும் சமாதான நோபல் பரிசு பெற்ற, உலகமே பாராட்டிய சனநாயக விடுதலைப் போராளியாக இருந்த ஆங்சாங் சுஜியின் ஆட்சியில் இவ் அசிங்கமான செயற்பாடுகள் நடைபெறுவது இரட்டிப்பு வேதனையளிக்கின்றது.

ஆகவே, உலகளாவிய மனிதஉரிமை அமைப்புக்கள் உடனடியாக இதில் கவணம் செலுத்த வேண்டும் என விநயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். சர்வதேச சட்ட நியமங்களை மதிக்காத மியன்மாருக்கு எதிராக மனிதஉரிமை ஆணையகத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவ்வாறன இனச்சுத்திகரிப்பு உலகில் எந்தமனிதர்களுக்கும் நிகழக்கூடாது என்பதே மனிதத்தை நேசிக்கும் மனிதர்களின் எண்ணமாக இருக்கவேண்டும்.

மனச்சாட்சி இனச்சாட்சி கடந்து இனச்சுத்திகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எமது ஆழமானதும் அழுத்தமானதுமான கோரிக்கையாகும்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ரோஹிங்கிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள்-உலக கனவான்கள் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது- Reviewed by NEWMANNAR on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.