அண்மைய செய்திகள்

recent
-

சந்தர்ப்பத்தை தவறவிடாது எல்லோரும் உறுதியுடன் இருந்தால் வெற்றிசாத்தியம் இரா.சம்பந்தன்


புதிய அரசியல் அமைப்பை உருவாக்க கிடைத்துள்ள இந்த சந் தர்ப்பத்தை தவறவிடக்கூடாதென  எல்லோரும் நியாயமாகவும் உறுதி யுடனும் இருந்தால் இந்த முயற்சி வெற்றியடையக்கூடிய எல்லாசாதக மான நிலைமைகளும் உள்ளன என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம் பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், பிரதம மந்திரியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலும்
அதனோடு சேர்த்து முன்வைக்கப்பட்டுள்ள இணைப்புக்களிலும் அடங்கியுள்ள விட யங்கள் பற்றிய கருத்துக்களைத் தற்பொழுது கூறுவது எனது எண்ணமல்ல.  அத்தகைய நோக்கத்துக்காக அரசியலமைப்புச் சபையின் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் அந்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன. 

நாங்கள் ஈடுபட்டுள்ள செயல்முறையின் சில விடயங்களின் அவசரமான தொடர்பு மற் றும் முக்கியத்துவம் பற்றியே குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.

சனநாயக சோசலிஷக் குடியரசாகிய எமது நாட்டிற்கான அரசியலமைப்பு ஒன்றை உரு வாக்கும் செயல்முறையிலேயே நாம் அனை வரும் ஈடுபட்டுள்ளோம்.  அடிப்படை மீயுயர் சட்டமாகிய இலங்கையின் அரசியலமை ப்பை உருவாக்கும் பணியில் நாம் பிரதிநிதி த்துவப்படுத்தும் மக்களின் சார்பாக இலங் கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களா கிய நாம் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்.
பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்க மைவாக இது மேற்கொள்ளப்படுகின்றது.  இந்தக் கட்டமைப்பின்படியே நாங்கள் யாவ ரும் சுயமாக விரும்பி ஒப்புக்கொள்ளவும் ஏற் றுக்கொள்ளவும் கூடிய வகையில் அரசியல மைப்பு உருவாக்கப்படும். 
நியாயமான, ஏற்புடையதான, போதியள வான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் செயற் பாடுகள் வெற்றிகரமாக முடிவுறும்போது அது இந்தப் பிரச்சினைக்கான உறுதியான முடி வைக் கொண்டுவரும்.

நாட்டின் மீயுயர் சட்டத்தின் அடிப்படையி லும், அதன் மக்களுடைய சுயவிருப்பத்துட னும், சம்மதத்துடனும் இலங்கை ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாததாகத் தொட ர்ந்தும் இருக்கும்.
வித்தியாசமான அடையாளங்களைக் கொண்டுள்ள வேறுபட்ட மக்களான சிங்கள வர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பற ங்கியர் போன்றோர் வாழுகின்ற நாடாக இல ங்கை உள்ளது.  அத்துடன் இலங்கை பல் வேறு அரசியற் கட்சிகள் செயற்படுகின்ற ஜன நாயகம் தொழிற்படுகின்ற நாடாகும். இரண்டு பிரதான அரசியற் கட்சிகளும் மாறி மாறி இந்த நாட்டின் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்திருக்கும் அதேவேளை, ஏனைய கட்சிக ளும் தங்களுடைய வகிபாகத்தைக் கொண் டிருந்தன.

இலங்கையில் இதுவரை கட்டமைக்கப் பட்ட அரசியலமைப்புக்கள் எதுவும் அதன் வேறுபட்ட மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்க ளின் இருதரப்பு ஒருங்கிசைவைப் பெற்றிரு க்கவில்லை  அல்லது இரு பிரதான கட்சிக ளின் மற்றும் ஏனைய அரசியற் கட்சிகளின் இருதரப்பு ஒருங்கிசைவையும் பெற்றிருக்க வில்லை.  அரசியலமைப்பு உருவாக்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அதற்கான ஒரு வாய்ப்பை முதற் தடவையாகத் தந்துள்ளன.

இதுவே, அரசியலமைப்பை அரசியல் சூழ்நிலைகளின் பிடிக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, இலங்கையை ஒரு தேசமா கவும் இலங்கையர் என்ற அடையாளத்தை யும் காட்டும் பண்புகளை உருவாக்கக்கூடிய அரசியலமைப்பொன்றைப் பெற்றுத் தரும்.  இலங்கை சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளாக இந்த நிலைமையை அடைய எம்மால் முடியவில்லை.

1987-1988 ஆண்டு தொடக்கம் அரசிய லமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் தொட ர்கின்றன.  செயல்வலு குறைந்ததாக இருந்த போதும், அரசியலமைப்புக்கான 13வது திரு த்தமே மத்திக்கும் மாகாணங்களுக்கு மிடை யிலான அதிகாரப் பங்கீட்டை முதற் தடவை யாக அரசியலமைப்புக்குள் உள்ளடக்கியது.  அப்பொழுது தொடக்கம் பின்வந்த ஜனாதிபதி களும் அரசாங்கங்களும் தேசியப் பிரச்சி னைக்கு இறுதித் தீர்வைக் காண்பதற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய முன்னேற்றகர மான பிரேரணைகளை முன்வைத்தனர்.  ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ ஆட்சிக் காலத் தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் பிரேரணைகள் வந்தன. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் கால த்தில் அமைச்சரவையின் அனுமதியுடன் 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அரசியல மைப்புப் பிரேரணைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. ஜனாதிபதி மகிந்த ராஜ பக்~ ஆட்சிக் காலத்தில் அவரால் நியமி க்கப்பட்ட பல்லின நிபுணர்களின் பிரேரணை கள் உருவாக்கப்பட்டதோடு, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவைத் தலைவராகக் கொண்டு சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்திருந்தது.  இப் போதைக்கு அவை பற்றிய விபரங்களுக்குள் நான் போகவில்லை. அத்தகைய பிரேரணை கள் பல்வேறு புறம்பான காரணங்களுக்காக அரசியலமைப்புடன் சேர்க்கப்படாவிட்டாலும் அப்பிரேரணைகள் தொடர்பாகக் கணிசமான ஒருங்கிசைவு காணப்பட்டதென்பதைத் தெரி விப்பது போதுமானதென எண்ணுகிறேன்.  உண்மையில் இதுமுன்னைய செயற்பாடுக ளின் தொடர்ச்சியெனக் குறிப்பிட்டுக் கூறுவ தோடு, இந்தச் செயற்பாடு முழுமையாக வித்தி யாசமான ஒரு சூழ்நிலையில் இடம்பெறுவத னால், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாதென எல்லோரும் நியாயமாகவும் உறு தியுடனும் இருந்தால் இது வெற்றியடையக் கூடிய எல்லாச் சாதகமான நிலைமைகளும் உள்ளன. 

தமது அடையாளமும், கௌரவமும் அங்கீ கரிக்கப்படும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளப் படக் கூடியதுமான அரசியலமைப்பு ஏற்பாடு களே தமிழ்பேசும் மக்களின் நீண்டகால அபி லாசையாக இருந்து வருகின்றது. உலகத்தில் பரவலாக இத்தகைய ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. தீர்வு காணப்படாத நிலைமை களின் விளைவாக முழு நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.  கல்வியறிவுடைய தகுதிவாய் ந்த இந்த நாட்டின் பிரசைகள், குறிப்பாகத் தமி ழர்களும் சிங்களவர்களும் நாட்டைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் புகலிடம் பெற்று ள்ளதனால் இந்த நாடு திறமையானவர்க ளைப் பாரிய அளவில் இழந்துள்ளது.  பல்வேறு வழிகளிலும் இந்த நாட்டின் எதிர்காலத்தி ற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.  நாங்கள் எமது நாட்டின் நற் பெயரை மீட்டெடுத்து சர்வதேசத்தின் மதி ப்பைப் பெறவேண்டிய தேவை உள்ளது.  எமது பொருளாதாரம் பாரிய அளவில் குறை பாடுடையதாக உள்ளதோடு, முன்னர் எமது வாழ்க்கைத் தரத்தை விடப் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் வேகமாக முன்னேற்ற மடைந்து இன்று நாம் வாழும் வாழ்க்கைத் தரத்தைவிட மிக உயர்ந்த வாழ்க்கைத் தர த்தைக் கொண்டவர்களாக இருப்பதால் பொரு ளாதார ரீதியில் நாம் மிகவும் பின்னடைந்து ள்ளோம்.  பாதுகாப்புச் செலவினங்களுக்காக பாரிய தொகையைச் செலவிட வேண்டியுள் ளதால் முக்கியமான துறைகளில் அபிவிரு த்திகளை மேற்கொள்ள வளப் பற்றாக்குறை தடையாக உள்ளமை பின்னடைவுக்குக் காரணமாகின்றது.

இத்தகைய காரணிகளே புதிய மீயுயர் அடிப்படைச் சட்டத்தின் மீது ஒரு புதிய எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய கட்டாய த்தை ஏற்படுத்தியுள்ளன.  இந்தப் புனிதமான பணியை வெற்றிகரமாகப் பூரணப்படுத்துவ தற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார் சம்பந்தர். 

சந்தர்ப்பத்தை தவறவிடாது எல்லோரும் உறுதியுடன் இருந்தால் வெற்றிசாத்தியம் இரா.சம்பந்தன் Reviewed by Author on September 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.