ஈழத் தமிழர்கள் மீது மறைமுக யுத்தம் தொடர்கின்றது! செல்வம் அடைக்கலநாதன்
தமிழர் மீது மறைமுக யுத்தம் தொடர்ந்து கொண்டிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் WARP சர்வதேச மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.உலகம் முழுவதும் நடை பெற்று வருகின்ற யுத்தங்களை நிறுத்துவதற்கும், இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்குமான WARP(World Alliance of Religions' Peace Summit மாநாடு, தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வருகின்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
சர்வதேச சமாதானத்தையும், யுத்தத்திற்கு எதிரான கருத்துக்களையும் வலியுறுத்தி நடைபெற்று வருகின்ற இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டுள்ளார்.தமிழ் மக்கள் மீது தொடரும் வெளித்தெரியாத யுத்தங்கள் பற்றி அந்த மாநாட்டில் அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, பிரித்தானிய டெலோ அமைப்பின் பொறுப்பாளர் சாம் சம்பந்தன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் மீது கண்ணுக்குத் தெரியாத முறையில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள திட்டமிட்ட யுத்தங்கள் (Structural Wars) கலாச்சார யுத்தங்கள் (Cultural wars) மற்றும் மத ரீதியிலான யுத்தங்கள்(Religious wars) பற்றிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழர்கள் மீது மறைமுக யுத்தம் தொடர்கின்றது! செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment