விஜய் படத்தால் எனது கனவு நிறைவேறிவிட்டது: பாடகர் தீபக்...
விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டது என்று பாடகர் தீபக் கூறியிருக்கிறார்.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் அறிமுகப்பாடலாக இடம் பெற்றிருப்பது ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பாடியதன் மூலம் தமிழ் திரை உலகில் தனி இடம் பிடித்திருப்பவர் பாடகர் தீபக். அவர் கூறுகிறார்....
“சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டாப் 12 போட்டியாளராக தேர்வானேன், அதுவே பாடகனாக வெளியுலகுக்கு என்னை அறிமுகமாக்கிய முதல் மேடை. பின்னர் விஜய் ஆண்டனி என்னை திரையுலகிற்கு பாடகராக அறிமுகப்படுத்தினார்.
2014 ஆம் ஆண்டில் தளபதி விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தீம் பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வாரத்திற்குள்ளாகவே அஜித்தின் ‘வீரம்‘ படத்தின் தீம் பாடலையும் பாடினேன். அதன் பிறகுதான் தீபக் என்ற பாடகரை பலருக்கு தெரிய ஆரம்பித்தது. இதுவரை 60 படங்களுக்கு மேல், 150 பாடல்கள் வரை பாடியுள்ளேன்.
தற்போது மீண்டும் விஜய் சாருக்காக, ‘மெர்சல்’பட அறிமுக பாடலை பாடும் வாய்ப்பை பெற்றேன். ஏ.ஆர்.ரகுமான் சார் இசையில் ஒரு முறையாவது பாடவேண்டும் என்பது கனவு. அவரது இசையில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை பாடியதன் மூலம் என் கனவு நிறைவேறி இருக்கிறது. ஒரு பாடகன் என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இந்த பாடலை அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த பெருமைக்கு காரணமான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் அட்லி, விஜய் அண்ணன் அனைவருக்கும் நன்றி”.
விஜய் படத்தால் எனது கனவு நிறைவேறிவிட்டது: பாடகர் தீபக்...
Reviewed by Author
on
September 05, 2017
Rating:

No comments:
Post a Comment