வில்வித்தை உலகக் கோப்பை பைனல்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் தீபிகா குமாரி
ரோம் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை பைனல் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து முறை வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி, மகளிர் ரிகர்வ் பிரிவில் இந்த முறையும் கடுமையாக போராடி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 8 வீராங்கனைகள் பைனலுக்கு தகுதி பெற்றனர்.
இந்த பைனல் தொடரின் முதல் சுற்றில் தீபிகா குமாரி, தைவான் வீராங்கனை தான் யா டிங்கை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்தே இலக்கை சரியாக எட்ட முடியாமல் திணறிய தீபிகா, கடைசியில் 0-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.
இப்போட்டியில் கொரிய வீராங்கனை கி போ பே தங்கம் வென்றார். ரஷ்யாவின் சேனியா பெரோவா வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் சாங் ஹை ஜின் வெண்கலமும் வென்றனர்.
வில்வித்தை உலகக் கோப்பை பைனல்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் தீபிகா குமாரி
Reviewed by Author
on
September 05, 2017
Rating:

No comments:
Post a Comment