'1000 கவிஞர்கள் கவிதைகள்' உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா....வெகுவிமரிசையாக நடைபெற்றது
'1000 கவிஞர்கள் கவிதைகள்' உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.
கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலாகும்.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது.
ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு 'செயலாற்றுநர்' எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.
'1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.
வெளியீடு:செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம்.
இன்று 21-10-2017 யாழ்ப்பாணம் வீரசிங்கமண்டபத்தில்....
பாரம்பரிய தமிழ் இசையுடன் இன்னியம் நாதஸ்வரம் றபான் இசை பறை இசை கோலாட்டம் முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதோடு மங்களவிளக்கேற்றல் அதனைத்தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து விருந்தினர்கள் உரை கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு சிறப்பு நிகழ்வாக 1000 கவிஞர்கள் நூல் வருகை தந்த பேராசிரியர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளி சிறுவர்கள் இனிய வாழ்வு இல்லம் வெளியிட முதற்பிரதியை திரு.ஐ.எம்.சுரைஸ் பணிப்பாளர் அறிவிருட்ஷம் அவர்கள் பெற்றுக்கொண்டார் அதனைத்தொடர்ந்து சிறப்புப்பிரதிகள் மற்றும் கவிஞர்களுக்கான பிரதிகள் வழங்கப்பட்டது..
விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக ஈழப்பரப்பில் இதுபோன்ற தொகுப்புக்கள் வெளிவந்துகொண்டு இருந்தாலும் இப்படியானதொரு பெருந்தொகுப்பு வெளிவருவது மிகவும் பாராட்டுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியது இம்முயற்சியை மேற்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் கூறுவதோடு குறிப்பாக அயராது உழைத்த யோ.புரட்ச்சிக்கும் வாழ்த்துக்களும் காசுமலையும் அணிவிக்கப்பட்டது அதை மாற்றுத்திறனளிகள் இல்லத்துக்கு யோ.புரட்ச்சி வழங்கி வைத்தார் அத்தோடு அரங்கு நிறைந்த கலைஞர்கள் சுவைஞ்ர்கள் அறிஞ்ர்கள் கலந்து சிறப்பித்தனர் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படியான பெருநிகழ்வு மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது
தொகுப்பு- வை-கஜேந்திரன்-
'1000 கவிஞர்கள் கவிதைகள்' உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா....வெகுவிமரிசையாக நடைபெற்றது
Reviewed by Author
on
October 21, 2017
Rating:
No comments:
Post a Comment