"50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்குள்"
"50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்குள்" இலங்கையிலுள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏதாவது ஒருவகையான வன்முறையை அனுபவித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினை குறித்த பகிரங்க பொதுக் கலந்துரையாடலில் நடத்தப்படாமை பெரிய குறைபாடாக உள்ளது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்லாசே மார்கியு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டுத் தினத்தைக் குறிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்"
இலங்கையிலுள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏதாவது ஒருவகையான வன்முறையை அனுபவித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினை குறித்த பகிரங்க பொதுக் கலந்துரையாடலில் நடத்தப்படாமை பெரிய குறைபாடாக உள்ளது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்லாசே மார்கியு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டுத் தினத்தைக் குறிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவால் காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது:பாடசாலைகளில் சிறுவர்களுக்கு நன்கு கற்பித்தல் மற்றும் தகவலறிவித்தலிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறையைத்தடுத்தல் ஆரம்பமாகின்றது.
பெண்களின் உரிமைகளுக்கான தூதுவர்களாகு வதற்கு குமார் சங்கார மற்றும் மகேல ஜெயவர்தன ஆகியோர் இணக்கம் தெரிவித்தபோது நாம் மகிழ்வுற்றோம். ஆழமாக வேரூன்றியுள்ள பிரச்சினைகள் பற்றிய அத்தகைய முன்மாதிரிகளிடமிருந்து இலங்கை ஆண்கள் செவிமடுக்கவேண்டியது மிகவும் முக்கியமாகும்.
"50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்குள்"
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment