அமெரிக்க மக்களுக்காக ஒரே மேடையில் தோன்றிய 5 ஜனாதிபதிகள்: ஒபாமா பதிவிட்ட செய்தி
அமெரிக்காவில் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் ஒரே மேடையில் தோன்றிய சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா போன்ற புயல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இதில் ஏராளமான பொருட் சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது.
இதனால் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில்அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாக தோன்றினர்.
தி ஒன் அமெரிக்கா அப்பீல் என்ற இந்த இசை நிகழ்ச்சி மூலம் இதுவரை 31 மில்லியன் டொலர் வசூலாகி உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக ஒபாமா முன்பே செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>அதில் முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில், சக அமெரிக்கர்கள் புயல் பாதிப்பில் இருந்து) மீண்டு வர நாங்கள் உதவ விரும்பினோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க மக்களுக்காக ஒரே மேடையில் தோன்றிய 5 ஜனாதிபதிகள்: ஒபாமா பதிவிட்ட செய்தி
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment