அண்மைய செய்திகள்

recent
-

பிரசவத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் 5 விதமான வலிகள்....



பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் மட்டும் வலிகளை அனுபவிப்பதில்லை. பிரசவத்திற்கு பிறகும் கூட பெண்களுக்கு சில வலிகளை அனுபவிக்கிறார்கள்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் 5 விதமான வலிகள்
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் மட்டும் வலிகளை அனுபவிப்பதில்லை. பிரசவத்திற்கு பிறகும் கூட பெண்களுக்கு சில வலிகளை  அனுபவிக்கிறார்கள். குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் பின்னாளில் சற்று அதிகமாக சிரமப்படுவார்கள். பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் வலிகளால் பெண்கள் அசௌகரியமாக உணருகிறார்கள்.

கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களின் மார்பகங்கள் சற்று அதிகமாகவே வளர்ச்சியடைந்திருக்கும். பின்னர் பால் கொடுக்க தொடங்கும் போது, குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால், தாய்க்கு பால் கட்டிக்கொள்ளும். இதனால் பெண்களுக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்படும். மேலும் மார்பக காம்புகளில் உண்டாகும் புண்களினாலும் வலி உண்டாகும்.

பிரசவத்திற்கு பிறகு பெண் உறுப்புகளில் உள்ள காயங்கள் முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அதுவரை பெண் உறுப்புகளில் வலி இருக்கும். இது இயற்கையானது தான். குடல் அசைவுகளின் போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகும்.

சில நேரங்களில் யோனிகளில் உண்டாகும் வலியையும், நரம்புகளில் உண்டாகும் வலியையும் பெண்களால் வேறுபடுத்தி காணமுடியாது. இந்த வலியால் அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். அதுமட்டுமின்றி அவர்களால் நீண்ட நேரம் உட்காரவோ அல்லது குழந்தைக்கு பால் தரவோ மிக சிரமமாக இருக்கும்.

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் காயங்கள் ஆறும் வரை அவர்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது எடைகளை தூக்கமால் இருக்க வேண்டியது அவசியம்.

மகப்பேறுக்கு பிறகு இது ஏற்படுவது தான். ஆனால் பாக்டீரியாக்கள் சிறுநீரகப்பாதை வழியாகச் சென்று சிறுநீரகத்தை அடைந்தால், வலியும், எரிச்சலும் உண்டாகும்.

பிரசவத்திற்கு பிறகு சிறுநீரகப்பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகள் இருப்பது சாதாரணம் தான். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாமல் நீண்ட காலம் நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது சிறந்தது.

பிரசவத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் 5 விதமான வலிகள்.... Reviewed by Author on October 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.