அண்மைய செய்திகள்

recent
-

பனாமா கேட் ஊழலை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் படுகொலை


அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சிக்கிய பனாமா கேட் ஊழலை வெளிக்கொண்டுவந்த பத்திரிகையாளரை வெடிகுண்டு வைத்து மர்ம நபர்கள் இன்று படுகொலை செய்துள்ளனர். பத்திரிகையாளர் Daphne Caruana Galizia தமது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போதும் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் சம்பவயிடத்திலேயே அவர் உடல் சிதறி இறந்துள்ளார்.

மால்டாவில் உள்ள Bidnija கிராமத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அச்சுறுத்தும் கடிதம் ஒன்று கைப்பற்றியுள்ளதாகவும் கூறி காவல்துறையிடம் அவர் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர் Daphne Caruana Galizia தமது வலைப்பக்கத்தில் தொடர்ந்து ஊழல் குறித்தும், அதில் அரசியல்வாதிகளின் பங்கு குறித்தும் விலாவாரியாக எழுதி வந்துள்ளார். மால்டாவில், பனாமா கேட் ஊழல் குறித்து Caruana Galizia மிகவும் ஆழமான விசாரணையை மேற்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதில் மால்டா பிரதமர் Joseph Muscat பதவி ஊசலாடிய நிலையில், இன்றைய இந்த தாக்குதலானது மிகவும் கொடூரமானது என அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இந்த விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தமது பதவியை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பனாமா கேட் ஊழலை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் படுகொலை Reviewed by Author on October 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.