ஆசியாவின் அதிசயம் குறித்து ஓர் மகிழ்ச்சியான செய்தி
கொழும்பில் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் அதிசயம் எனக் கூறப்படும் தாமரைக் கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளது.இதற்கான திட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், உட்புற மற்றும் வெளிப்புற பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் எக்ஸிம் வங்கியின் 104.3 மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.அந்த திட்டத்தின் ஆரம்பப் பணிகளை 912 நாட்களில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தில் 50 தொலைக்காட்சி மற்றும் 35 வானொலி சேவைகளுக்கு இணைப்புக்களை வழங்கவுள்ளது. அத்துடன், மாபெரும் விற்பனை கூடங்கள், உணவகங்கள், காட்சியறைகள் உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் இந்த தாமரை கோபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியாவின் அதிசயம் குறித்து ஓர் மகிழ்ச்சியான செய்தி
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment