அண்மைய செய்திகள்

recent
-

அடிக்கடி சோடா குடிப்பதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்


அஜீரணம் ஏற்பட்டால் சோடா குடித்தால் சரியாகும் என்று சொல்லக் கேட்டிருப்போம். சோடா உடலுக்குள் சென்றால் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அடிக்கடி சோடா குடிப்பதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
இன்றைக்கு பலரும் நாகரிகம் கருதி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளையே பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்க கூடியது. இன்றைக்கு ஹோட்டல், தியேட்டர், பார்க் என்று எங்கு சென்றாலும் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுடன் சேர்த்து சோடா குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடயே இப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. உடலுக்கு தீங்கு தரக்கூடியது என்று தெரிந்தும் சுவைக்காக தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு சோடா குடிப்பதில் அடிக்‌ஷனே ஏற்ப்பட்டு அதனை நிறுத்த முடியாத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜீரணம் ஏற்பட்டால் சோடா குடித்தால் சரியாகும். உணவு எளிதாக செரிக்கும் என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். இது உண்மையா? சோடா உடலுக்குள் சென்றால் என்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஹார்வோர்டு மருத்துவப் பள்ளியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது நிரூபணம் ஆகியிருக்கிறது. தொடர்ந்து அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடைகிறதாம். டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோடாவில் அதிகமாக இருப்பது சர்க்கரை மட்டுமே. தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனைத் தவிர நீங்கள் அன்றாடம் எடுக்கும் உணவுகள் வேறு இருக்கிறது. தொடர்ந்து நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிக் கொண்டேயிருந்தால் அது சர்க்கரை நோய்க்கு வழி வகுத்துவிடும்.



பொதுவாக கேஃபைன் பொருட்களில் டியூர்டிக் என்ற அமிலம் கலந்திருக்கும். அதனை தொடர்ந்து குடித்து வந்தால் அவை சிறுநீரின் உருவாக்குவதை துரிதப்படுத்தும் ஆற்றல் உடையது. வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பதினால் உடலில் உள்ள தண்ணீர் சத்தினை இழக்க நேரிடும். செல்கள் எல்லாம் புத்துணர்சியுடன் இருந்தால் மட்டுமே உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்களை பிரித்து மற்ற பாகங்களுக்கு அனுப்பும். அதோடு சோடா கழிவுகளை பிரிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்திடும்.

சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக அதில் இருக்கும் இனிப்புச் சுவை என்பது அமோனியா மற்றும் சல்ஃபைட் இரண்டும் அதிக அழுத்ததிலும் மற்றும் அதிக வெப்பத்தினாலும் சேர்க்கப்பட்டிருக்கும். இதில் ஏற்படும் வேதியல் மாற்றங்களினால் methylimidazole உருவாகிறது எலிகள் மீது நடத்திய சோதனையில் இந்த ரசாயனத்தால் குடல், கல்லீரல் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கும் ஆற்றல் கொண்டது. பி எச் அளவு குறைவாக இருக்கும் போது தான் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். நாம் குடிக்கும் தண்ணீர் பி எச் அளவு 7.0 ஆனால் சோடாவில் இருக்கும் பி எச் அளவோ 2.5 க்கும் குறைவாக இருக்கும்

சோடாவில் இருக்கும் போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளரச் செய்திடும். இதனால் கை கால்களில் வலி மற்றும் மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இன்றைக்கு உடல் எடை குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இருக்கிறது. டயட் என்ற பெயரில் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று டயட் சோடா டயட் சோடா குடிப்பதனால் எந்த கலோரியும் அதிகரிக்காது உடல் எடை குறையும் என்று நம்பப்பட்டு பலரும் தினமும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விட இது குடிப்பதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் உறுதியாக நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறான போக்கு. சோடாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது சர்க்கரைச் சுவை தான். அதோடு இது குடிப்பதால் மட்டுமே உங்களின் உடல் எடை குறையாது.


அடிக்கடி சோடா குடிப்பதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் Reviewed by Author on October 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.