உலக நாடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள்....
உலக நாடுகள் பலவற்றிலும் தினந்தோறும் பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்ற போதும் கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டே வருகின்றன.
சவுதி அரேபியா:பலாத்காரக் குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியை மெக்கா அமைந்திருக்கும் திசை நோக்கி முட்டிப்போட்டு உட்கார வைத்து, நீளமான கத்தியால் தலையை வெட்டித் துண்டாக்குவது தான் தண்டனை. இதே தண்டனையை போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.
வடகொரியா:கடுமையான சட்டங்களை பின்பற்றும் வடகொரியாவிலும் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியின் மர்ம பகுதியில் சுட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட காவலர்களால் தண்டனை நிறைவேற்றப்படும்.
ஈரான்: இஸ்லாமிய மதச் சட்டத்தை பின்பற்றுவதால், குற்றவாளியை கல்லால் அடிக்கவும், சில சமயங்களில் மரண தண்டனையும் விதிக்கப்படும்.
ஆப்கானிஸ்தான்:பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்ட 4 நாட்களுக்குள், குற்றவாளியின் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.
சீனா:பலாத்காரக் குற்றவாளியின் முதுகெலும்பு கழுத்துடன் சேரும் இடத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
பிரான்ஸ்: பலாத்காரக் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துவிட்டால், 30 ஆண்டுகளாக தண்டனைக்காலம் அதிகரிக்கும்.
ரஷ்யா:பலாத்காரத்திற்கு 3 முதல் 6 ஆண்டுகள் மட்டுமே தண்டனை. பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டால் 15 ஆண்டுகள் சிறை. பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்து மரணித்தால், குற்றவாளிக்கு 12 முதல் 20 ஆண்டுகள் சிறை. மட்டுமின்றி குற்றவாளிக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் தடை விதிக்கப்படும்.
உலக நாடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள்....
Reviewed by Author
on
October 06, 2017
Rating:
Reviewed by Author
on
October 06, 2017
Rating:


No comments:
Post a Comment