மாதுளம் பழத்தை எதற்காக ஆண்கள் சாப்பிட வேண்டும்?
மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இது உகந்த பழமாகும். ஒரு கப் மாதுளம்பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது.
மேலும், 24 கிராம் சர்க்கரை மற்றும் 144 கலோரி உள்ளது. எதற்காக ஆண்கள் சாப்பிட வேண்டும்? ஆண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது அதிகம் என்பதால், இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும். ஆண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருவுறுதலுக்கு மாதுளம் பழம் உதவியாக இருக்கிறது, சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும், அவர்கள் மாதுளம் சாற்றினை அருந்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் விறைப்புத்தன்மை செயல்பாட்டை சீராக்கும்.
மாதுளம் பழத்தை எதற்காக ஆண்கள் சாப்பிட வேண்டும்?
Reviewed by Author
on
October 16, 2017
Rating:

No comments:
Post a Comment