மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேலும் ஒரு சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசலையில் உள்ள சத்திர சிகிச்சைக்கூடத்தின் இட வசதி குறைவாக காணப்பட்ட நிலையில்,மேலும் ஒரு சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 11 மணியளவில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திருமதி அன்ரன் சிசில் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து வருகை தந்த அதிதிகள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசலையில் உள்ள சத்திர சிகிச்சைக்கூடத்தில் இட வசதி குறைவாக காணப்பட்ட நிலையில்,வைத்தியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேற்கொண்ட துரித முயற்சியின் பலனாக மேலும் ஒரு சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(27-10-2017)
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திருமதி அன்ரன் சிசில் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து வருகை தந்த அதிதிகள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசலையில் உள்ள சத்திர சிகிச்சைக்கூடத்தில் இட வசதி குறைவாக காணப்பட்ட நிலையில்,வைத்தியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேற்கொண்ட துரித முயற்சியின் பலனாக மேலும் ஒரு சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(27-10-2017)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேலும் ஒரு சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
October 27, 2017
Rating:
No comments:
Post a Comment