மன்னாரில் சிவமோகன் எம்.பி...அரசியல் தீர்வில் விரக்தியடைந்துள்ள தமிழர்கள்!
அரசியல் ரீதியான தீர்வில் நம்பிக்கை இழந்த தமிழர்கள் ஒரு விளிம்பில் சென்று கொண்டிருக்கின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைப் போராட்டம், ஆரம்ப காலத்தில் அகிம்சை ரீதியில் எடுக்கப்பட்டு தந்தை செல்வாவின் வழியில் வழி நடத்தப்பட்டு மீண்டும் தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுத போராட்டமாக பரிணமித்து மீண்டுமொரு அகிம்சை ரீதியிலான ஜனநாயாக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 01-10-2017 மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நீண்ட காலமாக சிங்கள அரசுகள் தமிழினத்தை ஏமாற்றி வருகின்ற வரலாறுகள் நாங்கள் அறிந்தவையே.அந்த துரதிஸ்டவசமான எமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது தமிழ் மக்கள் இன்று நம்பிக்கை இன்றி ஒரு விளிம்பில் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமே என அவர் தெரிவித்தார்.
மன்னாரில் சிவமோகன் எம்.பி...அரசியல் தீர்வில் விரக்தியடைந்துள்ள தமிழர்கள்!
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment