அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் இனத்தின் வீர வரலாற்றை உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டு மண்ணில் பாரதிராஜா


தமிழ் இனம் ஒன்று உள்ளது அதற்கும் வீர வரலாறு இருக்கிறது என்பதை உலகறியச் செய்தவர் பிர பாகரன் மட்டுமே என இயக்குநர் சிகரம் பாரதிராஜா மட்டு மாவட்ட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கூறி யுள்ளார். அங்கு உரையாற்றிய பாரதிராஜா மேலும் கருத்து தெரி விக்கையில்,
பிரபாகரன் மட்டும் இல்லை யென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலை இருந் திருக்கும் காலம் எமது முகத்தில் கோடு போட்டாலும் அந்த கால த்தில் கோடுகளை கலைஞர்கள் நிலத்தில் போட்டுள்ளனர். இந்த மண்ணில் எத்தனை யோ கலைஞர்கள் கலைகள் அதன் அத்தனை அறுவடைகளும் இந்த மண்ணுக்கேயுரியது.

கலைஞர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, கலைஞர்களை காலங்கள் பேசும் இந்த கலைஞர்களின் படைப்புகள் பேசும். 76 வயதினை கடந்துள்ள நிலையிலும் கலை யொன்றே மனிதனை தளர்ச்சியில்லாமல் வாழ வைக்கும் என்பதை உணர்ந்துள் ளேன்.

கலைஞர்கள் மட்டுமே சாதாரண மனி தர்களில் இருந்து மாறுபட்டவர்களாகவுள்ள னர். எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க கூடிய வர்கள் தான் கலைஞர்கள். கலைஞர்களுக்கு வயதே கிடையாது, கலைகள் அவர்களை காப்பாற்றுகின்றது, அவர்களுடைய எண்ண ங்களை கலைகள் என்றும் இளமையா கவே வைத்திருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்தமாக காப்பா ற்றிக் கொண்டிருக்கின்றார்கள், இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமிழ் மொழியை கட்டி காப்பது போல் தமிழ் நாட்டில் கூட யாரும் தமிழ்மொழியை கட்டிக் காக்கவில்லை.
அகநானூறு, புறநானூறு என்று எவ்வ ளவோ படைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் உங்கள் படைப்புகளிலே தமிழ் இன்னும் சோர்ந்து போகாமல் இருக்கிறது. அது உங்க ளுக்கு பெருமை தரும் விடயமாகும்.
மொழியின் மீதும் இனத்தின் மீதும் அழு த்தமான பக்தியை உங்களை விட யாரும் வைத்ததில்லை. நான் இந்த பூமியில் கால் வைக்கும் போதெல்லாம் பெருமையாக உணர்ந்தேன்.
தமிழ் நாட்டில் தமிழர்களதும், தமிழச்சி களதும், வீர வரலாற்றை புத்தகங்களிலும், ஏடு களிலும் வாசித்துப் பார்த்திருக்கின்றோமே ஒழிய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்த தில்லை. வீர வரலாற்றை வாழ்ந்த தமிழர்க
 ளும், தமிழச்சிகளும் ஈழத்தில் தான் இருக்கி ன்றார்கள்.

சுத்தமான தமிழ் உரையாடல் இங்கிரு க்கின்றது. இன்னும் நீங்கள் சோரம் போக வில்லை, இங்கு ஏற்பட்ட நெருக்கடி கூட நல்ல தற்கோ என நான் நினைத்ததுண்டு. கார ணம் அந்த நெருக்கடிகளினால் இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்து கொண் டிருந்தாலும் சரி அங்கும் முளைத்து விருட்ச மாய் இருப்போம் என வாழ்ந்து கொண்டிரு க்கின்றார்கள்.

தமிழனை அடையாளப்படுத்துவது ஈழ மண் மட்டும் தான், கறுப்பாக ஒரு தமிழன் இருந்தான் அவன் வீர வரலாறு கொண்ட வன் என அடையாளப்படுத்தியது பிரபாகரன் மட்டும் தான், அவர் இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்கும் தெரிந்தி ருக்க வாய்ப்பில்லை, தமிழினத்தை உலகு க்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் மட் டுமே.
மூத்த கலைஞர்களுக்கு நான் விருதுகள் வழங்குவதை விட அவர்களது கரங்களால் நான் ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல வேண் டும் என தெரிவித்தார்.
தமிழ் இனத்தின் வீர வரலாற்றை உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டு மண்ணில் பாரதிராஜா Reviewed by Author on October 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.