இலங்கையில் இதயமாற்று சிகிச்சை செய்த யுவதி திடீரென மரணம்
கண்டி பொது வைத்தியசாலையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட யுவதி உயிரிழந்துள்ளார். அழுத்கம, களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான சச்சினி செவ்வந்தி என்ற யுவதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இலங்கையில் இரண்டாவது இதயமாற்று சத்திர சிகிச்சை கடந்த 27ம் திகதி கண்டி போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய, கண்டி ஹாரகம பிரதேசத்தைச் சோந்த 28 வயது இளைஞனின் இதயமே குறித்த யுவதிக்கு பொருத்தப்பட்டிருந்தது.
கண்டி போதனா வைத்தியசாலையில் முதலாவது இருதய மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு 2 மாதங்களில் இரண்டாவது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதலாவது மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சிகிச்சை வெற்றியளித்துள்ளதுடன், இதயம் மாற்றப்பட்ட பெண் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதயமாற்று சிகிச்சை செய்த யுவதி திடீரென மரணம்
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment