மன்.புனிதசவேரியார் ஆண்கள் தேசியகல்லூரியின் உளநலமற்றும் மாணவர்தினநிகழ்வுகள்......
புனிதசவேரியார் ஆண்கள் தேசியகல்லூரியின் உளநலதினமானது 19-10-2017 அன்று கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு
சிறப்பு விருந்தினர்களாக
வண.அருட்.தந்தைC.அன்ரனிதாஸ் டலிமாஅவர்களும்
திருமதி. P.தனேஸ்வரன் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியஆலோசகர் அவர்களும் கலந்து இந்நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
இவ் வருடத்தின் உளநலதினத்தின் மகுடவாசகமாக ‘மனநலம் காக்கமனம் விட்டுப் பேசுவோம்’ என்னும் தொனிப்பொருளில் சிறப்புப் பாடல் மற்றும் வில்லுப் பாட்டு போன்ற கலைநிகழ்வுகள் இடம் பெற்று இவ்விழாசிறப்புப் பெற்றது. அத்துடன் பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்திற்குசென்றுஅவர்களைகனம் பண்ணி அன்பளிப்புக்களை வழங்கியமாணவர்களுக்குசமூகப்பணிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அடுத்து மாணவர்தின நிகழ்வானது 20.10.2017 இன்று கல்லூரியின் அதிபர் அருட்.சகோ.S.E.றெஜினோல்ட்FSCஅவர்களின் தலைமையில் இடம் பெற்றது. பிரதமஅதிதியாக கௌரவ அமைச்சர் திரு.ஞா.குணசீலன் சிறுவர் பாதுகாப்புமற்றும் சுகாதாரத் துறைஅவர்களும் ஏனைய விருந்தினர்களும் கலந்துசிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் மூன்றுமுக்கியஅம்சங்கள் சிறப்புப் பெற்றிருந்தன.
முதலாவதாகபாடசாலையின் மாணவத் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டுஅவர்களதுசேவைகள் பாராட்டப்பட்டதோடுமாணவத்தலைவர்களுக்கானசத்தியப் பிரமாணம் அனுபவப் பகிர்வு என்பனவும் இடம் பெற்றன.
அடுத்து 2016ம் ஆண்டுக.பொ.த(சா.த) 8Aபெற்ற மாணவன் கலியுகவரதன் ஷோன் ஜேசுகரன் பரீட்சைமீளாய்வுஅறிக்கையின் படி 9யுசித்திபெற்று மாவட்டத்தில் 9A சித்தியைபெற்ற அதிகூடிய எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டபாடசாலையாகமாவட்டத்தில் முதல்நிலைக்குபாடசாலையைத் தரமுயர்த்தியமாணவரையும் அவரது பெற்றோரையும் கௌரவி;க்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக நீண்ட இடைவேளையின் பின் உதைப்பந்தாட்டத்தில் தேசியமட்டத்தில் சாதனைபடைத்த 18 வயதின் கீழ்ப்பிரிவின் மாணவர்களையும் பொறுப்பாசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்களின் கலைநிகழ்வுடன் விழா இனிதே நிறைவுற்றது.
மன்.புனிதசவேரியார் ஆண்கள் தேசியகல்லூரியின் உளநலமற்றும் மாணவர்தினநிகழ்வுகள்......
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment