வடகொரியா விவகாரத்தில் ஒபாமா-புஷ் தோற்றுப்போனார்கள்: நான் தோற்கமாட்டேன் என டிரம்ப் சபதம்
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பிரச்னையை சுமுகமாக தீர்க்க பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்துள்ளன. தற்போது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நேரடியாக ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
இதனால் இருநாடுகளுக்கிடையே போர் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உலகநாடுகள் உள்ளன. இந்நிலையில், சீனா சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிறுத்தி கொண்டால் பதற்றம் தானாக நீங்கிவிடும் எனவும் அதற்காக, வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருவதாக கூறியிருந்தார்.
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என நமது வெளியுறவுத்துறை மந்திரியிடம் நான் கூறியுள்ளேன்.
என நாம் கடந்த 25 ஆண்டுகளாக நினைத்தது நடக்கவில்லை, இனி எப்படி நடக்கும். இந்த விவகாரத்தில் கிளின்டன் தோற்றுப் போனார், ஜார்ஜ் புஷ் தோற்றுப் போனார், ஒபாமா தோற்றுப் போனார். ஆனால், நான் தோற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
வடகொரியா விவகாரத்தில் ஒபாமா-புஷ் தோற்றுப்போனார்கள்: நான் தோற்கமாட்டேன் என டிரம்ப் சபதம்
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment