அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் அகதி சடலமாக மீட்பு ...
அவுஸ்திரேலியா மானுஸ் தீவிலுள்ள வைத்தியசாலையில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மனுஸ் தீவில் Lorengau வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை தமிழ் அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தின் வேண்டுகோளிற்கமைய உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் பகிரக்கப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் இலங்கை தமிழராகும் அத்துடன் அவர் அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சட்டபூர்வமாக பாதுகாக்க வேண்டியிருந்தார். அவர் கடந்த மாதங்களாக கடுமையான மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என மனுவு தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும், அவரது நண்பர் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அந்த வைத்தியசாலையில் போதுமான வைத்திய ஆதரவு கிடைக்காமையினால் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளதாக மானுஸ் தீவிலுள்ள அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மரணம் பப்புவா நியூ கினி பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கடல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் அகதி சடலமாக மீட்பு ...
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment