பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வைத்திய பட்டதாரியாகிய இலங்கை யுவதி
இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகள் ஒருவர் பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.
நடிகையான செனாலி பொன்சேகா என்பவரே இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவர் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார். சிறுவயது முதலே பிரித்தானியாவில் வாழும் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கற்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றவருக்கு இலங்கை நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வைத்திய பட்டதாரியாகிய இலங்கை யுவதி
Reviewed by Author
on
October 18, 2017
Rating:

No comments:
Post a Comment