வவுனியாவில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம்!
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வீட்டுக்குச்சென்று அவரின் தாயாரை சந்தித்து கலந்துரையாடினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
நேற்று முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி வவுனியா சென்றிருந்தார்.
இந்நிலையில், குடும்பத்தின் சுகங்துக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு வருகை தருவதாக ஜனாதிபதி மாணவி வித்தியாவின் தாயாருக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.
மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்

Reviewed by NEWMANNAR
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment