விட்டமின் C நிறைந்த உணவுகளை குறைத்தால்? என்ன நடக்கும்?
விட்டமின் C-யை உணவுகளில் மட்டுமே பெற முடியும். இந்த சத்து நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
ஆனால் அதுவே குறைந்தால் உடல்நலக் கோளாறுகள் அதிகமாகும்.
விட்டமின் C நிறைந்த உணவுகள்? விட்டமின் C முளை கட்டிய தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே முளை கட்டுவதற்கு தானியங்களை 24 மணி நேரம் நீரில் நனைத்து, வடிகட்டி ஈரத்துணியில் மூடி வைத்து 2-3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.கடலைப்பருப்பு, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய தானியங்களை பச்சையாக அல்லது குறைவாக சமைத்து சாப்பிடலாம். நெல்லிக்கனி மற்றும் ஆரஞ்சு பழத்தில் விட்டமின் C அதிகம் உள்ளது. இந்த நெல்லிக்காயை காய வைத்து, சமைத்து கூட சாப்பிடலாம்.
விட்டமின் C உணவுகளை சாப்பிடுவதன் நன்மைகள்
உடல் வளர்ச்சி, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. விட்டமின் C உணவுகள் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை ஏற்படாமல் தடுக்கிறது. அடிபட்ட காயங்கள், தீப் புண்கள் போன்றவற்றை விரைவில் குணமாக்குகிறது. உணவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை உடல் கிரகிக்க விட்டமின் C உதவுகிறது. தீவிரமான காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகிய பிரச்சனைகளை குணமாக்குகிறது. விட்டமின் C குறைந்தால் என்ன நடக்கும்?
ஸ்கர்வி , ரத்த நாளங்கள், எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், பசியின்மை, புண்கள் ஆறாமல் போதல், கால், தொடைகளில் வலி, வீக்கம், காய்ச்சல், வாந்தி ஆகிய பிரச்சனைகள் உண்டாகும். ஆஸ்டியோ பொரோசிஸ் (Osteo – poresis) எனும் எலும்புச் சிதைவு நோய், எடை குறைதல், அஜீரணம், தோல் பாதிப்புகள் ஆகியவை ஏற்படலாம்.விட்டமின் C அதிகமானால் என்ன நடக்கும்?
ஒரு நாளுக்கு விட்டமின் C-ஆனது நம் உடலில் 100 மி.கி. அளவு வரை எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமானால் பேதி, வயிற்று வலி, மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாய்ப் புண்கள், சிறுநீரகத்தில் கற்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.
விட்டமின் C நிறைந்த உணவுகளை குறைத்தால்? என்ன நடக்கும்?
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment