டி20 போட்டியில் சாதனை: ரன் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய வீரர்,,,
ராஜஸ்தானில் நடைபெற்ற டி20 போட்டியில் உள்ளூர் வீரர் ஓட்டம் எதுவுமே கொடுக்காமல் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தானில் மறைந்த பவேர் சிங் என்பவர் பெயரில் 20 ஓவர் போட்டிகள் கொண்ட போட்டி நடத்தப்பட்டது. இதில் உள்ளூரை சேர்ந்த திஷா கிரிக்கெட் அகாடமியும், பேர்ல் அகாடமி அணிகளும் மோதின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற பேர்ல் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது, இதைத் தொடர்ந்து விளையாடிய திஷா அணி 20 ஓவர் முடிவில் 156 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, பேர்ல் அணி 36 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் திஷா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமலே வீழ்த்தி அசத்தினார்.
முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ், அடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவர்களில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியாக 4-வது ஓவரை வீசிய அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
டி20 போட்டியில் சாதனை: ரன் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய வீரர்,,,
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment