சிறந்த வீரர் விருதை வென்ற தமிழக வீரர் அஸ்வின் -
"2017 ஆம் ஆண்டிற்கான விராட் கோஹ்லி அறக்கட்டளை சார்பில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ளார்கள்.
இதில் சிறந்த வீரருக்கான விருதை தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் வாங்கியுள்ளார்.
கடந்த வருடம் வருடத்தின் சிறந்த ஐசிசி கிரிக்கெட்டர் மற்றும் 2016ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை வாங்கினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஒரு வருடத்தில் வருடத்தின் சிறந்த ஐசிசி கிரிக்கெட்டர் மற்றும் 2016ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வாங்கிய இரண்டாவது இந்திய வீரர் இவர் தான், இதற்கு முன்பு ராகுல் டிராவிட் ஒரே வருடத்தில் இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.
அதே போல், வருடத்தின் சிறந்த வீரர் என்ற விருதை பெற்ற மூன்றாவது வீரர் இவர் தான், இதற்கு முன்பு ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்த விருதை வாங்கியுள்ளார்கள்.
சிறந்த வீராங்கனை என்ற விருதை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மித்தாலி ராஜ் வாங்கியுள்ளார்.
சிறந்த வீரர் விருதை வென்ற தமிழக வீரர் அஸ்வின் -
Reviewed by Author
on
November 15, 2017
Rating:
Reviewed by Author
on
November 15, 2017
Rating:


No comments:
Post a Comment