தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் பிரபாகரன் திரைப்படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியீடு -
இதன் முதலாவது முன்னோட்டக்காட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அந்த வகையில் 2ஆவது முன்னோட்டக்காட்சியை நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டள்ளனர்.
அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கியின் இயக்கத்தில் உருவாகிய “ஒக்காடு மிகிலாடு” திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்துள்ளார்.
பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து உருவாகும் ஒக்காடு மிகிலாடு திரைப்படம் உலகம் முழுவதும் இம்மாதம் 10ஆம் திகதி பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது படம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைக் கதையை உள்ளது உள்ளபடி படைத்துள்ளதாகவும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் போர் நெறிகளையும் அதற்கான காரணங்களையும் தத்ரூபமாக காட்டுவதாக இந்திய ஊடகமான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை தெலுங்கில் “ஒக்காடு மிகிலாடு” எனும் பெயரில் வெளியாகும் குறித்த திரைப்படம் தமிழில் “நான் திரும்ப வருவேன்” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் பிரபாகரன் திரைப்படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியீடு -
Reviewed by Author
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment