600 பேர் அகதிகள் மனுஸ் தீவு முகாமில் விவகாரம்! குற்றச்சாட்டை மறுத்துள்ள அவுஸ்திரேலியா-
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்து வெளியேறும் அகதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில் இல்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அவுஸ்திரேலியா அரசாங்கம் மறுத்துள்ளது.இந்நிலையில், மனுஸ் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறும் அகதிகளுக்காக தங்குமிடம் தயார் நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள அகதிகள் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மனுஸ் தீவு தடுப்பு முகாம் நிரந்தரமாக மூடப்பட்டதை தொடர்ந்து, குறித்த முகாமிற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த தடுப்பு முகாமில் இருக்கும் அகதிகளை சகல வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு பப்புவா நியூகினி அரசு வலியுறுத்தி வருகிறது.
எனினும், அகதிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்கள் போதிய வசதிகளுடன் முற்றிலுமாக தயார் நிலையில் இல்லை என UNHCR இன் பேச்சாளர் Catherine Stubberfield குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அவுஸ்திரேலியா நாட்டின் குடிவரவு அமைச்சர் Peter Dutton மறுப்பு தெரிவித்துள்ளார்.இதேவேளை, மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து வெளியேறுவதற்கு தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ள 600 பேர் தமது போராட்டத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 600 பேர் வரையிலான அகதிகள் மனுஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
600 பேர் அகதிகள் மனுஸ் தீவு முகாமில் விவகாரம்! குற்றச்சாட்டை மறுத்துள்ள அவுஸ்திரேலியா-
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment