8 வருடங்களின் பின் இலங்கை குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை? வீதியில் இறங்கிய நியூஸிலாந்து மக்கள் -
நியூஸிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ள இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அந்நாட்டில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நியூஸிலாந்துக்கு தொழில் தேடிச் சென்ற இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது. தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் தற்போது நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் க்ளூதா சௌத்லேண்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஹமிஷ் வோக்கரின் ஏற்பாட்டில் தினேஷாவின் 42ஆவது பிறந்த நாள் தினமான இன்று இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பேரணியை நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுனில் உள்ள மக்கள் நடத்தியுள்ளனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தினேஷாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குடும்பம் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 வருடங்களின் பின் இலங்கை குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை? வீதியில் இறங்கிய நியூஸிலாந்து மக்கள் -
Reviewed by Author
on
November 27, 2017
Rating:

No comments:
Post a Comment