வவுனியாவில் வேலையில்லாப் பட்டதாரிகள் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம்....
வவுனியாவில் வேலையில்லாப்பட்டதாரிகள் எதிர்வரும் சனிக்கிழமை 02.12.2017 காலை 9மணிக்கு வவுனியா மையப் பேருந்து நிலையத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமது கவனவீர்ப்புப் போராட்டத்திற்கு சிவில் சமூகத்தினர், பாடசாலைச்சமூகத்தினர், பெற்றோர்கன். விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள், இளைஞர் கழகம் என்பன ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
அனைவருக்கம் வணக்கம்...
கடந்த சனிக்கிழமை ஒன்று கூடலில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது தொழில் உரிமையை வென்றெடுக்க எமக்கு கிடைத்துள்ள ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு இது. தயவு செய்து அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது உங்கள் 10 நண்பர்களின் வரவை உறுதிப்படுத்துங்கள் கடந்த முறை வுனியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது போன்று இம்முறையும் களம் வெற்றிபெற வேண்டும் தயவுசெய்து உங்கள் தனிப்பட்ட வேலைகளையும், கடமைகளயும் ஒதுக்கிவைத்து எம் அனைவருடனும் கைகோருங்கள் என அன்புடனும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் சமூகம்
வவுனியா மாவட்டம்
வவுனியாவில் வேலையில்லாப் பட்டதாரிகள் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம்....
Reviewed by Author
on
November 30, 2017
Rating:

No comments:
Post a Comment