யாழில் தனியார் வைத்தியசாலையில் தவறான சிகிச்சை! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் -
தவறான சிகிச்சை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அண்மையில் நொதேர்ன் தனியார் வைத்தியசாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
அவர்களுடைய கண் பார்வை தொடர்பிலான எந்த விதமான அறிக்கைகளும் இன்னமும் கிடைக்க பெறவில்லை. அவர்களுக்கு என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பது கூட தற்போது கூற முடியாது.
அவர்கள் கடுமையான கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என குறிப்பிட்டார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் திருப்பி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மூவர் தொடர்ந்து தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
அத்துடன் தவறான சிகிச்சை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். அதனூடாக நீதிமன்றை நாடி பாதிக்கப்பட்டவர்கள் நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழில் தனியார் வைத்தியசாலையில் தவறான சிகிச்சை! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் -
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment