பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இலை: சமையலுக்கு யூஸ் பண்ணறீங்களா -
கொத்தமல்லியை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டால், வாசனைக்கான என்று தான் சொல்வார்கள்.
ஆனால் இப்படி இருக்கும் கொத்தமல்லியை அழகு மற்றும் ஆரோக்கியத்திற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்..
இரத்த சர்க்கரை அளவு
இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.எலும்பு மற்றும் தசைகள்
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.நிம்மதியான தூக்கம்
இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.சத்துக்கள்
கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.கண்பார்வை
கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.குழந்தை ஆரோக்கியமாக பிறக்க
கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.
பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இலை: சமையலுக்கு யூஸ் பண்ணறீங்களா -
Reviewed by Author
on
November 29, 2017
Rating:

No comments:
Post a Comment