மன்னார் முருங்கன் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் 'அம்மாச்சி உணவகம்' அமைக்கப்பட்டுள்ளமைக்கான விளக்கம்-(படம்)
வடமாகாண விவசாய அமைச்சினால் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் உள்ள அரச கால் நடை வைத்திய அதிகாரி அலுவல வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வருகின்ற அம்மாச்சி உணவகம் தொடர்பில் கடந்த 1 ஆம் திகதி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
குறித்த அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக விளக்கம் ஒன்றை மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஊடகங்களுக்கு இன்று புதன் கிழமை(8) அனுப்பி வைத்துள்ளார்.
-அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
அம்மாச்சி உணவகம் தொடர்பாக 01.11.2017 ஆம் திகதி வெளியான செய்தி சார்பாக,
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2016 இன் நிதியுதவியுடன் அம்மாச்சி உணவக கட்டுமான பணிகள் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2017ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெறப்பட்டு தற்போது கட்டிட வேலைகள் பூர்த்தியடையும் நிலையிலுள்ளது. டிசம்பர் மாதத்தில் இவ் உணவகமானது திறந்து வைக்கப்படவுள்ளது.
அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் கொள்கை விளக்கத்தில் நாட்டின் அபிவிருத்தியானது கிராம அபிவிருத்தியினை அடிப்படையாக கொண்டதுடன் கிராமபுற மக்களுக்கான வேலைவாய்பினை உருவாக்குதலுக்கும் திணைக்களங்கள் பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டிடத்தினை அமைப்பதற்கான காணி தொடர்பாக அமைச்சு மட்டத்திலான திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களில் ஆராயப்பட்டு முருங்கன் கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதே போன்ற உணவகமானது அநுராதபுரத்திலும் நகரத்திலிருந்து 15 கிலோ மிற்றர்களுக்கப்பால் உள்ள இடத்திலேயே அமைந்துள்ளது.
நகர்புறங்களில் காணப்படும் உணவகங்கள் மூடிய கட்டிடத் தொகுதிகளிலேயே இயங்குகின்றன.
ஆனால் இவ்வாறான திறந்த நிலையிலுள்ள உணவகங்களை நகர் புறத்தில் அமைப்பதால்; சுகாதாரமுறைகளை பின்பற்றுவதில் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டும்.
அம்மாச்சி உணவகமானது முருங்கனில் அமைக்கப்படுவது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட விவசாய குழுக்கூட்டங்களிலும் மாகாண மட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அம்மாச்சி உணவகத்தில் உணவுற்பத்தியில் வட்டுப்பித்தான், பெரிய புள்ளச்சி , பொற்கேணி போன்ற முருங்கனை சூழவுள்ள கிராம பண்ணை பெண்கள் ஈடுபடவுள்ளார்கள்.
இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவார்கள். கிராமபுற மக்களின் போசணையை மேம்படுத்துவதற்கும் இவ்வம்மாச்சி உணவகமானது பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.என அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் முருங்கன் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் 'அம்மாச்சி உணவகம்' அமைக்கப்பட்டுள்ளமைக்கான விளக்கம்-(படம்)
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment