வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது....
வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் மஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து ஒரு கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் புத்தளம் புகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து 2 கிலோ 70 கிராம் கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து மதவாச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து மதவாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 2 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் கைது இன்று செய்யப்பட்டுள்ளார்
மற்றொரு நபர் கிளிநொச்சியில் இருந்து மிகிந்தலைக்கு கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார். புல்மோட்டையைச் சேர்ந்த குறித்த நபரிடம் இருந்து 2 கசிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது....
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment